நான் இரயில் ல இருந்து விழுந்தப்போ விஜயகாந்த் துடிச்சிட்டாரு.. அந்த மனசுதான் சார் கடவுள் - பிரபல வில்லன் நடிகர்..!



villain actor speech about vijayakanth

கேப்டன் விஜயகாந்த் குறித்து நடிகர் அழகு அண்மையில் நேர்காணலில் தெரிவித்ததை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

கோலிவுட்டில் ரஜினி, கமலுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவருக்கு தற்போதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் திரைப்படத்தில் நடித்தாலும் சரி, நடிக்காவிட்டாலும் சரி கேப்டன் என்ற ஒற்றை வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படும் வகையில் இன்றளவும் இருக்கின்றன. 

மேலும் இவர் நடித்த திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டால் அது நல்ல டிஆர்பி ரேட்டிங்கையும் கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவரின் திரைப்படங்களில் உள்ள கம்பீரமான வசனம், ஆக்ரோஷமான சண்டை போன்றவை ரசிகர்களை இன்றளவும் கவர்ந்திருக்கிறது. 

மேலும் சக நடிகர்கள் டூப் போடுவதை பார்த்த இவர், பெரும்பாலும் டூப் போட்டு நடித்ததில்லை. படப்பிடிப்பில் யாருக்கேனும் அடிபட்டு விட்டால் தனக்கு அடிபட்டுவிட்டது போல துடித்து அவர்களுக்கு உதவிசெய்வார். தனக்கு வழங்கப்படும் அதே உணவு ஒவ்வொருவருக்கும் திரைப்பட படப்பிடிப்பின் போது சென்று சேரவேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருந்து அதற்காக பாடுபட்டவர். 

actor

இவ்வாறாக "செந்தூரப்பூவே" படப்பிடிப்பின் போது படத்தில் வில்லனாக நடித்திருந்த அழகு என்பவர் தனக்கு நேர்ந்த சுவாரசிய சம்பவத்தை அண்மையில் தெரிவித்துள்ளார். அதில் ஷூட்டிங் நடக்கும்போது ரயிலின் மேற்புறத்தில் விஜயகாந்தை ஒரு பக்கம் கயிற்றால் கட்டி., மற்றொரு பக்கத்தில் என்னை கட்டி இருப்பார்கள். 

நான் அவருடன் மேற்புறத்தில் இருப்பேன். அப்போது அவர் கயிற்றைப் பிடித்து இழுக்கும்போது, தவறுதலாக பல்டி அடித்து ரயிலில் அந்தப் பக்கம் முள்புதருக்குள் விழுந்துவிட்டேன். இதனை பார்த்த விஜயகாந்த் பதறி, முற்புதருக்குள் கை, கால்களில் பலத்த காயத்துடன் இருந்த என்னை பத்திரமாக இறக்கி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நான் நலமாக இருக்கிறேன் என்ற தகவல் தெரிந்ததும்தான் அவர் நிம்மதி பெரும் மூச்சுவிட்டார்" என்று தெரிவித்தார்.