#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. இவரா.! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது இந்த பிரபலமா!! வெளிவந்த ஷாக்கிங் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் மக்கள் மத்தியில் பரிச்சயமான பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 7ம் கடந்த சீசன்களை போலவே சண்டை, சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அனன்யா ராவ் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார். அவரைத் தொடர்ந்து பவா செல்லத்துரை பிக்பாஸ் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என தாமாகவே வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதால் கடந்த வாரம் எலிமினேஷன் எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வாரம் நிக்சன், மணி சந்திரா, விசித்ரா, அக்ஷயா, விஜய் வர்மா, பிரதீப், பூர்ணிமா ரவி, வினுஷா, மாயா, சரவண விக்ரம்
ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் பாரதி கண்ணம்மா சீரியல் வினுஷா குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.