கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான மகள்; உண்மையை அறிந்து தாய் விபரீதம்.. பறிபோன உயிர்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, திருநகரம், அழகாபுரி பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரின் மனைவி சாந்தி. தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இவர்களின் மூத்த மகள் சண்முக பவானி, மதுரையில் செயல்பட்டு வரும் கண் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது, பாரப்பத்தி பகுதியில் வசித்து வந்த இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே சமூக வலைத்தளம் வாயிலாக நட்பு ஏற்பட்டுள்ளது.
தாய் - மகள் தற்கொலை முயற்சி
இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் தனிமையில் நெருங்கியதால் பவானி கர்ப்பமாகி இருக்கிறார். மகளின் கர்ப்பம் குறித்து அறிந்த தாய் சாந்தி, மனமுடைந்து விஷமருந்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: போதை பழக்கத்தை உறவினர்கள் கண்டித்ததால் சோகம்; விஷம் குடித்து பலி.!
இதனால் பதறிப்போன பவானியும், பயத்தில் விஷம் குடித்துள்ளார். இருவரும் உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தையின்மை, கடன் தொல்லையால் விரக்தி; மின்கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை.!