விஸ்வாசம் பொய் வசூல் என கூறிய பிரபலம்- உண்மையை கூறிய படக்குழு -சந்தோஷத்தில் ரசிகர்கள்!



Vishuwasa hit

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது விஸ்வாசம் திரைப்படம். வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிவா மற்றும் அஜித் கூட்டணி சேர்ந்ததால் விஸ்வாசம் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

வீரம், வேதாளம் இரண்டும் வெற்றிப்படங்கள் என்றாலும் விவேகம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் நான்காவதாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது இந்த படம்.

Vishwasam

இந்நிலையில் தற்போது பிரபல விநியோகஸ்தர் ஒருவர் அஜித்தின் ரசிகர்களுக்காக பொய் வசூல் விவரம் கூறப்பட்டது என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆனால் விஸ்வாசம் படத்தை விநியோகம் செய்த KJR ஸ்டூடியோஸ் இப்படம் மெகா ஹிட் வெற்றி என ஒரு பதிவு போட தல ரசிகர்கள் அந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.