பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னது! விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் அவருக்கு பதில் நடிக்கவிருந்தது இந்த நடிகர்தானா.! வெளியான சுவாரசிய ரகசியம்!
கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இளம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு, திரிஷா மற்றும் அவர்களுடன் இணைந்து விடிவி கணேஷ் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விடிவி கணேஷ் சிம்புவிற்கு நண்பனாகவும், காமெடி நடிகராகவும் கலக்கியிருந்தார். மேலும் வித்தியாசமான தோணியில் அவர் பேசிய, இங்கே என்ன சொல்லுது ஜெஸி ஜெஸினு சொல்லுதா என்ற டயலாக் இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானது. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.
ஆனால் முதலில் விடிவி கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல முன்னணி காமெடி நடிகர் விவேக் நடிக்கவிருந்ததாகவும், ஆனால் அவரிடம் கால்ஷீட் இல்லாத நிலையில் அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் அதன் பின்னே தான் நடித்ததாகவும் பேட்டி ஒன்றில் விடிவி கணேஷ் கூறியுள்ளார்.