புதிய அவதாரம் எடுக்கும் விஜே அர்ச்சனா... குவியும் வாழ்த்துகள்.!



VJ archana joined RJ in mirchi fm

பிரபல விஜேவாக இருந்த அர்ச்சனா தற்போது ஆர்ஜேவாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

தனது பேச்சு திறமையால் ரசிகர்கள் மத்தியில் பிரபல விஜேவாக நீங்கா இடம் பிடித்தவர் அர்ச்சனா. தற்போது புதிய அவதாரமாக மிர்ச்சி எப்எம்மில் ஆர்ஜேவாக களமிறங்கியுள்ளார். ஹை சென்னை வித் அர்ச்சுமா என்ற புதிய காலை ஷோவை வழங்க இருக்கிறார்.

தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை வாரத்தின் 6 நாட்கள் ஒலிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இன்று முதல் தனது பணியை தொடங்கவுள்ளார். இச்செய்தியை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.