#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இவர்கள் தான் என் உலகம்... அப்படி யாரை தான் தொகுப்பாளினி பிரியங்கா கூறியுள்ளார் தெரியுமா.? குழப்பத்தில் ரசிகர்கள்...
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் பலவிதமான கேம் ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான தொடக்கத்தில் தனது காதல் கணவருடன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.ஆனால் அதன்பிறகு இவர் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட காதல் கணவர் பற்றி ஒன்றும் பேசவில்லை.
இதனால் இருவரும் பிரிந்து விட்டனரா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தனது அம்மா மற்றும் தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா இவர்கள் தான் என் உலகம் என்றும் பதிவிட்டுள்ளார். பிரியங்காவின் இந்த பதிவு தற்போது நெட்டிசன்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.