#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனி ஒருவன்- 2 படப்பிடிப்பு தொடங்குவது எப்போது.?
கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயம் ரவி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவருக்கு பற்பல திரைப்பட வாய்ப்புகள் வர மெல்ல, மெல்ல முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜெயம் ரவி மாறிப்போனார்.
தற்போது," காதலிக்க நேரமில்லை, ஜெனி, பிரதர் போன்ற திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, தன்னுடைய அண்ணன் ராஜா இயக்கவுள்ள தனி ஒருவன்-2 திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். மேலும் இப்போது அந்த திரைப்படத்தின் 2-ம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சூழ்நிலையில் தான், தற்போது ஜெயம் ரவி கைவசமிருக்கும் 3 திரைப்படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, எதிர்வரும் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் தனி ஒருவன்-2 திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.