#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"யாரு பெருசுன்னு அடிச்சி காட்டு" வடிவேலு பாணியில் சண்டை போட்ட திரை பிரபலம்..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தமிழில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர் என பல திறமைகளை கொண்டவர் கௌதம் வாசுதேவன்.
கமலஹாசன் கதாநாயகனாக நடித்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் அந்த அளவிற்கு பெரிதளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை தற்போது படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதனை அடுத்து ரசிகர் ஒருவர் இச்செய்தியை ட்விட்டரில் கமலஹாசனின் தீவிர ரசிகனால் உருவாக்கப்பட்ட சிறந்த திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவிற்கு லோகேஷ் கனகராஜ் சந்தேகமே இல்லை அவர் தான் தீவிர ரசிகன் என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதன் பின்பு கௌதம் வாசுதேவ் மேனன் லோகேஷ் கனகராஜை பாராட்டி, 'விக்ரம்' திரைப்படம் வரும் வரை நான் தான் தீவிர ரசிகன் என்று நினைத்தேன். 'விக்ரம்' படத்தை தாண்டி நல்ல திரைப்படம் ஒன்றை எடுக்க போட்டி போட போகிறேன். சட்டை கிழியாத சிறந்த போட்டியாக அமையும் என்று கூறியிருக்கிறார்