திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓஹோ.. சிவகார்த்திகேயன் தலையில் தொப்பி போட காரணம் இதுதானா?.. அவரே கூறிய தகவல் இதோ..!!
கோலிவுட்டில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
இதனையடுத்து சிவகார்த்திகேயனின் 21-வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியடைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் தனது தலையில் தொப்பி போட்டுக்கொண்டு பொது இடங்களில் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்னிடம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் வரைக்கும் ஹேர்ஸ்டைலை வெளியில் காட்டக்கூடாது என்று கூறினார். அதனால்தான் நான் தொப்பி போட்டு இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.