கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
காதல் கணவனுக்கு கள்ளத்தொடர்பு... விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.!!
சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை விசாரித்து வரும் நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காதல் திருமணம்
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான நவீனா என்ற பெண் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நம்பிராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். அமைதியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்வில் கடந்த சில மாதங்களாக பிரச்சனைகள் வரத் தொடங்கியது. மேலும் நம்பிராஜனின் நடவடிக்கைகளும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
பல பெண்களுடன் தொடர்பு
கணவனின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது செல்போனை சோதனை செய்திருக்கிறார் நவீனா. அதில் உள்ள குறுஞ்செய்திகளில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று சில பெண்களிடமும் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என சில பெண்களிடமும் கூறி அவர்களுடன் நம்பிராஜன் தவறான உறவில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கணவன் மற்றும் மனைவி இடையே பிரச்சனை பெரிதாக வெடித்துள்ளது.
இதையும் படிங்க: கந்து வட்டி தகராறு... கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!
தூக்கு போட்டு தற்கொலை
மேலும் நம்பிராஜன் தனது மனைவி நவீனாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகவும் விரக்தி அடைந்த நவீனா நேற்று அதிகாலை 4 மணி அளவில் புடவையால் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இது தொடர்பாக காசிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நம்பிராஜன் மற்றும் நவீனா இடையே திருமணமாகி 7 வருடங்கள் நிறைவு பெறாததால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்.!! 94 வயது மூதாட்டி கொடூர கொலை.!! பேரன் தப்பியோட்டம்.!!