3 நாளில் திருமணம்... உயிரை மாய்த்து கொண்ட இளம் பெண்.!! மர்மம் என்ன.??
சென்னை கோடம்பாக்கம் அருகே திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவருடன் கருத்து வேறுபாடு
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் அருகே வசித்து வந்தவர் சந்தியா. இவருக்கு பரத் என்ற நபருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தம்பதிகளுக்கு குழந்தை இல்லாதது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கணவரை பிரிந்த சந்தியா பெற்றோருடன் வசித்து வந்தார்.
மறுமணத்திற்கு ஏற்பாடு
இந்நிலையில் சந்தியாவின் பெற்றோர் அவருக்கு மறுமணம் செய்ய முடிவு செய்து சிவா என்ற நபரை வரன் பார்த்தனர். இந்த திருமணத்திற்கு சந்தியாகவும் சம்மதம் தெரிவித்ததால் இரு வீட்டார் முன் நிலையில் சிவா மற்றும் சந்தியாவிற்கு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. மேலும் நவம்பர் 17ஆம் தேதி திருமணத்திற்கு நாள் குறித்து பத்திரிகைகளையும் உறவினர்களுக்கு வழங்கினர்.
இதையும் படிங்க: "சேர்ந்து வாழ வரமாட்டியா.." கள்ள காதலன் மீது கொலைவெறி தாக்குதல்.!! இளம் பெண் கைது.!!
தற்கொலை செய்து கொண்ட சந்தியா
திருமணத்திற்கான நாள் நெருங்கி விட்டதால் ஜவுளி எடுப்பதற்காக சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது தனியாக இருந்த சந்தியா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கடையிலிருந்து திரும்பிய பெற்றோரும், உறவினர்களும் சந்தியா சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிரை கொன்ற மது பழக்கம்.. மகளை அசிங்கமாக பேசிய தந்தை.!! 14 வயது சிறுமியின் விபரீத முடிவு.!!