#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரத்தம் சொட்ட சொட்ட, தில்லாக நிற்கும் பிந்துமாதவி! யாருக்கும் அஞ்சேல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரட்டுதே!
கடந்த ஆண்டு ரொமான்டிக் திரைப்படமான இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தற்போது உருவாகும் திரைப்படம் யாருக்கும் அஞ்சேல். ரஞ்சித் ஜெயக்கொடி இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
த்ரில்லர் நிறைந்த படமான இதனை விஜய் சேதுபதியின் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் வெப்பம், சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை பிந்து மாதவி முக்கிய கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் நபர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடக்க, அவர் முன் ரத்தகறையுடன் நடிகை பிந்து மாதவி மிரட்டலாக நிற்கிறார். மேலும் அதில் 'அல்லவை வெல்ல நல்லவற்றின் அமைதி மட்டும் போதும்' என்ற வாசகமும் உள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.