பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிக்பாஸ் பாலாஜிக்கும் தனக்கும் என்ன உறவு! முதன்முதலாக போட்டுடைத்த நடிகை யாஷிகா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். மாடலான இவர் வெளிப்படையாக பல கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் பாலாஜி மற்றும் யாஷிகா இருவரும் நண்பர்கள் எனவும், அவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனக்ஷன்ஸ் ‘ நிகழ்ச்சியில் பாலாஜி, யாஷிகா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து முதன்முதலாக நடிகை யாஷிகா கூறியுள்ளார்.
சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம், பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பரா ? ஆனால்,நீங்கள் ஏன் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடரவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு யாஷிகா’நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகதான் இருந்தோம். ஆனால், அவரை நினைத்து நான் தற்போது சந்தோசப்படுகிறேன். இவர் இந்த நாட்களுக்காக எத்தனை ஆண்டுகள் ஆசைப்பட்டார் என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தற்போது இருவரும் பேசிக்கொள்வது இல்லையோ என கூறி வருகின்றனர்.