பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
MeToo: இந்த வயதில் இவ்ளோ பாலியல் தொல்லைகளா! புகார்களை அடுக்கும் யாஷிகா
MeToo அமைப்பின் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து, பாலிவுட் நடிகர் நானா படேகர் போன்ற முக்கியமானவர்கள் இதில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக அழைத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். சிறு வயதாக கருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களை விட யாஷிகா மிகவும் பக்குவத்துடன் நடந்து கொண்டார் என சக போட்டியாளர்களே கூறியிருந்தனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகழ்பெற்ற ஒரு பெரிய இயக்குநர் ஒருவரை நான் சந்திக்க சென்றேன். ஒரு ஹீரோவின் அப்பா மாதிரி அவர். பெயர் சொல்ல விரும்பவில்லை. என் அம்மா மூலம் அவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தார். ஆனால் நேரடியாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்திருந்தால் நான் நிச்சயம் புகார் அளித்திருப்பேன். இதுதவிர பொதுவெளியில் என்னை இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டினார்.
ஆனால் அவருக்கு நான் அந்த இடத்திலேயே பதிலடி கொடுத்தேன். என் வீடு அருகே இருந்த போலீஸ் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சித்தார். அதுகுறித்து நான் காவல்துறையில் புகார் தெரிவித்தேன். சில மாதங்களுக்கு முன் சாலையில் நின்ற பெண் ஒருவரிடம் போலீசார் ஒருவர் என்ன ரேட் என கேட்கும் வீடியோ வெளியானது; அந்த பெண் நான் தான். அதுகுறித்தும் புகார் கூறியுள்ளேன். மீடூக்கான முழுமையான ஆதரவை நான் தருவேன்.” என கூறியுள்ளார்.