#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எங்கவீட்டு மாப்பிளை அபர்ணாதிக்கு அடித்தது அதிர்ஷ்டம்! பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார்!
சில மாதங்களுக்கு முன்பு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழ் மக்களிடம் பிரபலமான தொடர்தான் எங்க வீடு மாப்பிளை. இந்த தொடரில் பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவிற்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. 16 பெண்கள் கலந்துகொண்ட இந்த தொடரில் வாரம் ஒருமுறை ஒருவர் வெளியேறி இறுதி கட்டத்தில் மூன்று பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரையும் தேர்வு செய்யாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் நடிகர் ஆர்யா.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர் அபர்னதி. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அபர்னிதி குடும்பபாங்கான பெண்ணாக தான் காட்சியளித்தார்.
இந்நிலையில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’யில் குடும்பப் பெண்ணாக வந்த அபர்னதி தற்போது மார்டன் பெண்ணாக வந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ஆளே மாறி பட்டணத்து மார்டன் பெண்ணாக காட்சியளிக்கிறார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.