ஹலோ! பிக் பாஸ் யாஷிகாவின் புது வீடியோ ஒன்னு வந்துருக்கு! நீங்க இன்னும் பாக்கலயா?



yennai-maatrum-kadhale-movie-trailer

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம். இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவிற்கு.

இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். ஒரே நைட்டில் பிரபலாமானார் யாஷிகா. பல்வேறு டிவி சேனல்கள், வலைத்தளங்களுக்கு பேட்டி கொடுத்தார் யாஷிகா. இவரது புகழை பார்த்த விஜய் டிவி பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியது.

Yashika anandh

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லலாம். இதன் மூலம் யாஷிகாவின் புகழ் மேலும் பரவியது. இந்நிலையில் யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது ‘ஆயிரம் கால் மண்டபம்’ என்ற படத்தில் நடித்து வரும் யாஷிகா, மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை யாஷிகா ,விஜய் தங்கய்யன் என்பவர் இயக்கம் ‘எனை மாற்றும் காதலே ‘ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் யாஷிகாவிற்கு ஜோடியாக தீபக் பரமேஷ் என்பவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த ஸ்பெஷல் வீடியோ உங்களுக்காக.