#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல ஹிட் சீரியல் நடிகர் திடீர் தற்கொலை! என்ன காரணம்? அதிர்ச்சியில் திரையுலகினர்!!
90ஸ் காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி குழந்தைகளை பெருமளவில் கவர்ந்த தொடர்கள் மர்ம தேசம், ஜீ பூம்பா. இந்தத் தொடர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லோகேஷ். அவர் தற்போது படங்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்.
மேலும் குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் அவர் விரைவில் வெள்ளித்திரையில் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் லோகேஷ் மனைவியுடன் விவாகரத்து, குடும்ப பிரச்சனை போன்றவற்றால் சில காலங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.