#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பரிதாபப்பட்டு இந்தியாவுக்கு டாட்டா காட்டும் கொரோனா.! பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், 2 ஆவது கொரோனா தொற்று அலை பரவி வருகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகளையும் மாநில அரசு அறிவித்து வருகிறது.
ஊரடங்கு விதிகள் கடுமையாக பின்பற்றப்படாமல் மக்கள் அலட்சியமாக நடமாடுவதால் மூன்றாம் அலைக்கான பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் சானிடைசர் உபயோகம் செய்தல் போன்றவற்றை இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.
‘‘இந்திய மக்கள் வறுமையிலும், அறியாமையிலும் வாடுகின்றனர். என்னிடமிருந்து தப்பிக்க வழிகளை கூறினாலும் செய்ய மறுக்கிறார்கள். இந்தியர்கள் மீது பரிதாபப்பட்டு ஈரேழு உலகத்தில் பூலோகத்தை தவிர்த்து பிற 13 உலகங்களுக்கு நான் செல்கிறேன். குட் பை இந்தியா’’-இப்படிக்கு கொரோனா#CovidParidhabangal
— Dr S RAMADOSS (@drramadoss) July 22, 2021
ஆனாலும் மக்கள் பல காரணத்திற்காக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவிர்த்து அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘‘ இந்திய மக்கள் வறுமையிலும், அறியாமையிலும் வாடுகின்றனர். என்னிடமிருந்து தப்பிக்க வழிகளை கூறினாலும் செய்ய மறுக்கிறார்கள். இந்தியர்கள் மீது பரிதாபப்பட்டு ஈரேழு உலகத்தில் பூலோகத்தை தவிர்த்து பிற 13 உலகங்களுக்கு நான் செல்கிறேன். குட் பை இந்தியா’’- இப்படிக்கு கொரோனா " என்று குறிப்பிட்டுள்ளார்.