3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
அரைக்கீரையின் அற்புத நன்மைகள்? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
அரைக்கீரை
பொதுவாக கீரைகளை நமது அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. ஏனெனில், கீரைகள் உடலுக்கு எந்த வித பாதிப்பை ஏற்படுத்தாமல், உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக அரைக்கீரை ஊட்டச்சத்துக்களில் களஞ்சியமாக திகழ்கிறது.
இதய ஆரோக்கியம்
அரைக்கீரை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. அதற்கு காரணம் அறிகுறியில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இது இது நோய் ஏற்படுவதை தடுக்கிறது.
இதையும் படிங்க: "தூக்கம் இல்லைன்னா எல்லாமே குளோஸ்" - அவரை பார்த்து இதை செய்யாதீங்க.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!
செரிமான அமைப்பை சீர்படுத்துதல்
அரைக்கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.
எலும்புகளை வலுப்படுத்தல்
அரைக்கீரையில் உள்ள வைட்டமின் மற்றும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துகிறது. மேலும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தி
அரைக்கீரையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனால், காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
கண் ஆரோக்கியம்
அரைக்கீரையில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால், கண்ணில் புள்ளி மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
இதையும் படிங்க: தாம்பத்திய விஷயத்தில் இருக்கும் குறைகளை உணவிலேயே சரி செய்யணுமா? அசத்தல் டிப்ஸ்.!