கழிவறையில் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்கிறீர்களா? அலர்ட் விடுக்கும் மருத்துவர்கள்.!



Smartphone Use in Toilet 

 

இன்றளவில் ஒவ்வொருவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசியமான பொருளாக இருக்கிறது. வீட்டில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் என்ற நிலை ஏற்பட்டு அம்மா, அப்பா, குழந்தைகள் என பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர். 

இவர்கள் பணிகளை முடித்துவிட்டு அதனை பார்க்காமல், எந்நேரமும் அதனை பார்ப்பதையே பணியாக வைத்துள்ளனர். ஐடி உட்பட மென்பொருள் சார்ந்த வேலைகளை செய்து வருவோர், கழிவறை செல்லும்போது கூட அதனை எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. 

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகிறீர்களா?

ஏற்கனவே ஸ்மார்ட்போன்களில் கழிவறையை விட மோசமான பாக்டீரியாக்கள் நிறைந்து இருக்கின்றன. ஆகையால், அவ்வப்போது ஸ்மார்ட்போன்களின் தொடுதிரைகளை, அதனை சுத்தம் செய்யும் திரவம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

Smartphone

இதனிடையே, ஸ்மார்ட்போன்களை கழிவறைகளில் வைத்து உபயோகம் செய்வது நோய் பரவலுக்கு வழிவகை செய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஸ்மார்ட்போனை பார்த்தவாறு கழிவறையில் இருப்பது, அதனை பயன்படுத்தும் நேரத்தை வெகுவாக அதிகரிக்கிறது. 

உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்

கழிவறையை அதிக நேரம் பயன்படுத்துவது, அங்குள்ள பாக்டீரியாக்களை நாம் உடலில் உட்புகுத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும். ஒரே நிலையில் அமர்ந்து செல்போனை பயன்படுத்தியவாறு கழிவறையில் இருப்பது குடல் நோய், இரைப்பை பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்ற அபாயத்தை ஏற்படுத்தும், 

ஸ்மார்ட்போனில் ஒட்டிக்கொள்ளும் பாக்டீரியா, நாம் அதனை பயன்படுத்தும் போது கைகளில் தொடப்பட்டு நமக்கும், அதனை பயன்படுத்துவோருக்கும் பரவும் என்பதால், கழிவறையை பயன்படுத்துவோர் சற்று கவனமாக இருப்பது நல்லது.