இரவு நேரத்தில் தலை குளிப்பவரா நீங்கள்.?! இது உங்களுக்கு தான்.. இவ்வளவு ஆபத்தா.?!



Dont wash your hair at night

பெரும்பாலான பெண்கள் ஷாம்பு பயன்படுத்தி தினமும் தலை குளிப்பதுண்டு. இவ்வாறு இரவு நேரங்களில் தலை குளிப்பது நல்லதல்ல. தலைக்கு குளிக்க வேண்டும் என்றால் அரை மணி நேரம் முன்னதாகவே, ஏதேனும் ஒரு இயற்கை ஹேர் மாஸ்க் பயன்படுத்தி தலையில் ஊற வைத்து சிகைக்காய் போட்டு குளித்து வந்தால் தலையில் எந்த பிரச்சனையும் வராது. நாம் இரவில் குளிக்கும் போது ஹேர் மாஸ்க் போட நேரம் கிடைக்காது.

இரவில் தலைக்கு குளிப்பத்தால் ஏற்ப்படும் ஆபத்து

இரவில் தலைக்கு குளித்தால் முடி காய்வதற்கு அதிக நேரம் எடுக்கும்.  மேலும், தலை முடி ஈரப்பதமாக இருப்பதால் பாக்டீரியக்கள், பூஞ்சை தொற்று, உண்டாகும். இது பொடுகு தொல்லையை அதிகரிக்கலாம். இரவு நேரத்தில் தலைக்கு குளித்தால் தூக்கம் விரைவாக வரும். ஆகையால் முடியை உலர்த்தாமலே சென்று உறங்கி விடுவோம்.

இதையும் படிங்க: இரவு நேரத்தில் உள்ளாடையுடன் உறக்கம்... நல்லதா? கெட்டதா?..!

Hair wash

இதனால், தலை முடி சரியாக காயாமல் நீர் கோர்த்துக் கொண்டு பொடுகை ஏற்ப்படுத்துவதுடன் ஜலதோஷம், தலைவலி உள்ளிட்ட உடல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். மேலும்,தலை குளித்துவிட்டு உலர்த்தாமல் விட்டுவிட்டால் தலை முடி பலத்தை இழந்து முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். தலை முடி சரிவர உலராமல் சீப்பு கொண்டு சீவினால் முடி அதிகமாக உதிரும்.

அதாவது நீங்கள் பகலில் குளித்துவிட்டு முடியை சரிவர உலர்த்தாமல் விட்டால் கூட அது பிரச்சினையாக தான் இருக்கும். நிறைய சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் தலை குளித்துவிட்டு, அப்படியே இரட்டை ஜடை இறுக்கமாக பின்னி போட்டுக்கொண்டு பள்ளிக்கு சென்று விடுவார்கள். இது முடி சரிவர காயாமல் தலையில் ஈரம் இருக்க வழி வகை செய்யும்.

இவ்வாறு செய்வதும் தலைமுடி பிரச்சனைகள் தலைவலி ஜலதோஷம் உள்ளிட்ட தொந்தரவுகளை ஏற்படுத்தும். தலை குளிக்கும் நாட்களில் அதிகாலை விரைவாக எழுந்து குளித்துவிட்டு முடியை நன்றாக உணர்த்திய பின்னர் தலை வாரிக்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: உஷார் நண்பர்களே., இளைஞர்களை குறிவைக்கும் பக்கவாதம்.!