53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இரவு நேரத்தில் உள்ளாடையுடன் உறக்கம்... நல்லதா? கெட்டதா?..!
பகல் நேரங்களில் பணிச்சூழல் உட்பட பிற காரணங்களால் உடலில் பல ஆடைகளை அணிந்துகொள்ளும் ஆண், பெண் இரவு நேரத்தில் அவற்றை கழற்றிவிட்டு தங்களுக்கு இணக்கமான உடைகளை அணிந்து உறங்க விரும்புகின்றனர். குறிப்பாக உள்ளாடைகளை துறந்த உறக்கத்தை பலரும் விரும்புகின்றனர்.
உள்ளாடைகள் இல்லாமல் உறங்குவது சரியா? தவறா? என பலருக்கும் கேள்விகள், சந்தேகம் இருக்கும். அதாவது, பகல் நேரத்திலேயே நாம் அணியும் உடைகள், உடலுக்கு இறுக்கமாக இல்லாமல், தளர்வான ஆடைகளே நல்லது. ஏனெனில், நமது மூக்கை போல உடலும் சுவாசம் மேற்கொள்ளும்.
வியர்வை அங்கேயே இருக்கும்.
இன்றளவில் பலரும் இறுக்கமாக அணியும் உடை பல்வேறு எதிர்கால உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உடலில் சுரக்கும் வியர்வை வெளியேறாமல், உடலிலேயே அல்லது அதனை ஒட்டிய ஆடையிலேயே கழிவாக தேங்குகிறது. இதனால் இரவிலும் அதே நிலை தொடர்ந்தால் கட்டாயம் உடலுக்கு பிரச்சனை ஏற்படும்.
இதையும் படிங்க: உஷார் நண்பர்களே., இளைஞர்களை குறிவைக்கும் பக்கவாதம்.!
சருமத்தின் சுவாச திறன் பாதிப்பு
இரவு நேரம் நாம் உள்ளாடை அணிந்து உறங்குவது, சருமத்தின் சுவாச திறனை வெகுவாக பாதிக்கும். பாலிஸ்டர், நைலான் போன்ற உள்ளாடைகள் ஈரப்பதத்தை தாக்குப்பிடித்து சூரனை, ஈரப்பதமான நிலையை உண்டாக்கி பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் தோல் எரிச்சல், தொற்றுநோய்களும் உண்டாகும்.
உள்ளாடையின்றி உறங்குவது நல்லது
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இறுக்கமான உள்ளாடைகள் காரணமாக பல பிறப்புறுப்பு தொற்றுகள் அபாயம் இருக்கிறது. இதனால் உள்ளாடை இன்றி உறங்குவது இருவரின் இனப்பெருக்க மண்டலத்திற்கு நன்மையை வழங்கும். பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது பேணிப் பாதுகாக்கப்படவேண்டியது என்பதால் கவனமுடன் செயல்படுவது நல்லது.
பாலிஸ்டர் ரக உள்ளாடைகள் தவிர்த்து, பருத்தி துணிகளை அணியலாம்.
இதையும் படிங்க: சுரைக்காயில் இப்படி செய்து சாப்பிட்டுள்ளீர்களா?.. ருசித்து சாப்பிட அசத்தல் டிப்ஸ்..!