பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தாயிடம் இருந்து மகள்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள மரபணு நோய்கள் என்னென்ன?..!
மரபணுவின் மூலமாக குடும்பத்தின் ஒரு தலைமுறையில் உள்ள நோய், அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது. தாயிடம் இருந்து மகள்களுக்கு எதிர்காலத்தில் தாய்க்கு இருந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவதன் மூலமாக மரபணு நோய்களை கட்டுப்படுத்த இயலும்.
புற்றுநோய் என்பது மரபணு நோயுடன் தொடர்புகொண்டது ஆகும். இது, உடலில் இருக்கும் செல்களை நேரடியாக பாதிக்கும். ஒரே இரத்த உறவை கொண்ட ஆணிற்கும் - பெண்ணிற்கும் புற்றுநோய் இருக்கும் பட்சத்தில், அது எதிர்கால சந்ததிக்கும் ஏற்படலாம். குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், பிறர் 35 வயதுக்கு மேல் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
அதனைப்போல, ஒற்றைத்தலைவலியும் அடுத்த தலைமுறைக்கு ஏற்படலாம். தாய்க்கு ஒற்றைத்தலைவலி பிரச்சனை இருந்தால், அவரின் குழந்தைகளுக்கு 80 % வரை பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பல பெண்கள் ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்படும் சூழல் இருக்கிறது. கர்ப்பமான காலங்கள், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றமும் ஒற்றைத்தலைவலிக்கு காரணியாக உள்ளன.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 51 வயதில் அல்லது 51 வயதை கடந்து முடிவுக்கு வருகிறது. தாயாருக்கு மாதவிடாய் சுழற்சி முன்னதாகவே நின்றிருக்கும் பட்சத்தில், மகளுக்கும் அதே காலத்தில் மாதவிடாய் நிற்க வாய்ப்புகள் உள்ளன. 20 பெண்களில் ஒருவருக்கு 46 வயது அல்லது அதற்கு முன்பு மாதவிடாய் சுழற்சி நிற்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
மரபணு தாக்கம் கொண்டுள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், மாதவிடாய் நிற்கும் நேரத்தில் ஏற்படும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். இதற்கு மருத்துவ ஆலோசனை என்பது அவசியமானதாகும். இதயம் செயலிழப்பது, மாரடைப்பு போன்ற இதய பிரச்சனையும் அடுத்த தலைமுறைக்கு ஏற்படும்.
தாய் இதய நோய்க்கு ஆளாகியிருந்தால், மகளுக்கும் அந்நோய் ஏற்படும் வாய்ப்பு 20 % உள்ளது. இதயநோயால் பாதிப்புக்கு உள்ளாகிய குடும்பத்தினர் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. ஞாபக மராத்தி மற்றும் மனநல பாதிப்பு போன்றவையும் மரபணுவால் அடுத்த தலைமுறைக்கு செல்லும். தாய்க்கு இத்தகைய பாதிப்பு இருந்தால் 45 % வரை குழந்தைகளும் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம்.
சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு, உடற்பயிற்சி மேற்கொண்டு, மனதையும் - உடலையும் ஆரோக்யத்துடன் பாதுகாத்தால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.