மலமிளக்கியாக செயல்படும் கொய்யா பழத்தை தினமும் சாப்பிடலாம் தப்பில்ல ...!



guava-fruit-which-acts-as-a-laxative-can-be-eaten-daily

கொய்யாப்பழம் சுவையானதும், மற்றும் நமது வீட்டுத் தோட்டங்களில் எளிமையாக கிடைக்கக் கூடிய பழமாகவும் உள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெறமுடியும்.கொய்யாப்பழம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.

வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். வாயுத்தொல்லைக்கு தீர்வளிப்பதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். கொழுப்புச் சத்து குறைவான பழம் என்பதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 

ஸ்கர்வி என்பது வைட்டமி சி  குறைபாட்டால் பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படுவது, பற்கள் உடைந்து விடுவது, உடலின் எலும்புகள் வலுவிழப்பது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் நோயாகும். இந்நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு இயற்கையிலேயே அதிகளவு வைட்டமின் சி சத்துகள் அதிகம் நிறைந்த கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவது சிறந்ததாகும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது. அருமையான கனிச்சாறு கொண்டுள்ளதால் குடல் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. கொய்யாப் பழம் மட்டுமல்லாமல், கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.