தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நோய் எதிர்ப்பு சக்தியுடன் சருமத்தை பாதுகாத்து முகப் பொலிவைதரும் கொய்யா: இதன் மருத்துவ குணங்கள் தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!
கொய்யாப் பழம் சாப்பிடுவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு கூடுவதுடன் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் மிகவும் உதவி செய்கிறது.
பொதுவாக அனைத்து பழங்களுமே மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும், கொய்யா பழம் விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும். மற்ற பழங்களை விடவும் கொய்யா பழத்தில்தான் அதிக வைட்டமின்-சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் நிறைந்துள்ளன.
கொய்யா பழத்தில் நிறைய வகைகள் உண்டு. அவற்றில் சிவப்பு கொய்யா மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தனை உண்பதால் நமது உடலில் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. மற்ற பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது குறைந்த அளவு சர்க்கரையை கொண்டுள்ளது.
குறிப்பாக நீரழிவு நோயாளிகளுக்கு உண்ணும் உணவில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி உண்பதற்கு கொய்யாப்பழம் ஏற்றதாக உள்ளது. சாதாரணமாகவே இரத்தத்தில் சர்கரை அளவை குறைக்கும் தன்மை கொய்யா பழத்திற்கு இருப்பதால் நீரழிவு நோயாளிகள் அச்சமின்றி கொய்யா பழத்தை சாப்பிடலாம்.
கொய்யா பழத்தின் தோலில் மிகுதியான சத்துக்கள் நிறைந்துள்ளதால், இதனை தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது. இதனால் நமது உடலின் சருமத்தில் ஏற்படும் வறட்சியை நீக்கி முகத்திற்கு பொலிவையும், அழகையும் கொடுக்கும். மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து இளமையாக மாற்றுகிறது.
கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைகிறது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் கொய்யா பழத்தை எல்லா காலங்களிலும் சாப்பிடலாம். குறிப்பாக கர்பிணி பெண்கள் கொய்யா பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதில் நிறைந்துள்ள வைட்டமின்-ஏ தாய் மற்றும் சேய் இருவருக்கும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் கண் பார்வை குறைபாடுகளை சரி செய்கிறது. கொய்யாப் பழம் மட்டுமல்லாமல், கொய்யா மரத்தின் வேர், இலைகள், மரப்பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.