தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சிறுநீரக கற்களை மருத்துவமனைக்கு செல்லாமலே எளிய முறையில் கரைப்பது எப்படி?
தற்போதைய வாழ்கை முறையில் டெக்னாலாஜி வளர்ச்சியின் காரணமாக அதிகப்படியானோர் உட்கார்ந்தே வேலை செய்வதால், அதிகப்படியான நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் முக்கியமாக சிறுநீரகங்களில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.
பெரும்பாலான சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்வோர் சிறுநீரக பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனென்றல் இவர்களுக்கு உடற்பயிற்சி குறைவாக இருக்கும், மேலும் இவர்கள் ஏசி அறையில் இருந்து வேலை செய்வதால் தண்ணீரும் அதிக அளவு குடிக்கமாட்டார்கள். இதனால் உடலில் நீர் சத்து குறைந்து கோளாறுகள் ஏற்படும்.
சிறுநீரக கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்:
* அடி முதுகுப் பகுதியில் வலி
* இயல்புக்கு மாறான சிறுநீர்
* சிறுநீரில் இரத்தம்
*சிறுநீர் போகும்பொழுது அதிகப்படியான எரிச்சல்.
* குளிர் காய்ச்சல், குமட்டல், வாந்தி
பித்தக்கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்:
* வயிற்றின் வலதுப் பக்கத்தில் அதிகப்படியான வலி
* குளிர் காய்ச்சல்
* கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி
* மார்பக எலும்பிற்கு கீழே வலி
* நெஞ்செரிச்சல்
* செரிமான பிரச்சனை
சிறுநீரக கற்கள் பிரச்சனையை எளிதில் குணப்படுத்த இயற்கை மருத்துவம் உள்ளது. முதலில் எலுமிச்சை தோலை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பார்ஸ்லி வேர் சேர்த்து நன்கு அரைத்து, வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் தேன், ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூனும், இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூனும் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர, விரைவில் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக் கற்கள் கரைந்துவிடும்.