பெண்களே கவனம்.. மாதவிடாய் நாட்களில் வெளியேறும் இரத்தம் நிறம் மாறுகிறதா?.. அசால்ட்டா இருக்காதீங்க..! 



Period Days Blood Color to Identify health 

மாதம் தோறும் பெண்களை வேதனைக்குள்ளாக்கும் பிரச்சனையில் மாதவிடாய் ஒன்று. இது இயற்கையானது என்றாலும் 50% பெண்கள் மாதவிடாயின் பிரச்சனைகால் அதனை வெறுக்கின்றனர். 

மாதவிடாய் நாட்களில் உடல் சோர்வு, படபடப்பு, தலைவலி, கை-கால் வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். சிலருக்கு வாந்தி, செரிமானப் பிரச்சனையும் இருக்கும். 

health tips

மாதவிடாயின் போது ரத்தத்தின் நிறத்தை வைத்து அவர்களது உடலின் ஆரோக்கியத்தையும் கூறலாம். மாதவிடாயை பொறுத்தமட்டில் இளஞ்சிவப்பு நிறத்தில் சில நேரம் மாதவிடாய் வெளியேறும். இது இயல்பானது. 

அடர் சிவப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுகிறது என்றால் கட்டிகளாக இருக்கும். ரத்தம் கட்டியாக வெளியேறும் பட்சத்தில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது என்பது அர்த்தம். 

health tips

சிறிய கட்டிகளாக இருந்தால் பிரச்சனை இல்லை என்றாலும், பெரிய கட்டியாக இருந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது. முதல் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மாதவிடாய் இருக்கிறது, கட்டிகள் வெளியேறுகிறது என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. 

கிரே கலந்த சிவந்த நிறம் அதிகமாக ஏற்படாது என்றாலும், ஒரு வேலை ஏற்பட்டால் உடலில் தேங்கி இருக்கும் பழைய ரத்தம் வெளியேறுகிறது என்று அர்த்தம். அப்படி இல்லாத பட்சத்தில் பாலியல் தொற்று காரணமாகவும் இந்த நிறத்தில் ரத்தம் வெளியாகும். 

health tips

கர்ப்ப காலத்தில் கரு கலைந்து விட்டாலும் இதே நிலைமைதான். சிலருக்கு பிங்க் நிறத்தில் இரத்தம் வெளியேறுவது உடலில் ஈஸ்ட்ரோஜின் அளவு குறைவாக இருப்பதை உறுதி செய்கிறது.