#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாயின் உமிழ்நீர் பட்டால் கூட உயிருக்கு ஆபத்தா? மருத்துவரின் பதறவைக்கும் வீடியோ!
உலகில் குணப்படுத்தவே முடியாத நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம் என்பதற்கு ஒரு நோய் இருக்கிறது என்றால், அது வெறிநாய்க்கடியால் வரும் ரேபீஸ் நோய் தான்.
இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்து விடலாம். ரேபீஸ் என்பது ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற நோய் ஆகும். இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது என ஆய்வு கூறுகிறது. அதனால்தான் இதனை வெறிநாய்க்கடி நோய் என்கிறோம்.
ரேபீஸ் நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் வாழும். இந்நாய் மனிதரைக் கடிக்கும் போது ஏற்படும் காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலில் பரவிடும். சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம். இதுகுறித்து மருத்துவர் கூறும் வீடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு மேல் ரேபிஸ் நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு அதிகபட்சமாக 90 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் தோன்றக்கூடும். இந்த நோய் உள்ளவர்களுக்கு உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. ரேபீஸ் நோய் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள். ரேபிஸ் நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழப்பார்கள். எனவே வெறிநாயின் உமிழ்நீர் உடம்பில் பட்டாலே உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.