கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
பருவகால நோய்கள் நம்மை உடனடியாக தாக்குவதற்கு காரணங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ..!
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, தற்போது பருவ கால மாற்றங்கள் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் பலரும் உடல் ரீதியான பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை மேற்கொள்வது, தடுப்பூசி செலுத்துவது தொற்று நோய்களை எதிர்த்து நாம் போராட உதவும். உடலில் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணங்களாக ஆறு காரணிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
நமது உடலில் போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாத பட்சத்தில், நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்து விடும். ஆரோக்கியமில்லாத உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, நொறுக்கு தீனி போன்றவை காரணமாக ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்காது.
இதனால் நமது உடல் நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதேபோல, தினமும் நாம் உடற்பயிற்சி செய்யாத பட்சத்திலும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். ஆகையால் வாரத்திற்கு மூன்று நாட்கள் குறைந்தபட்ச நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைவதில் முக்கிய காரணியாக இருப்பது மன அழுத்தம். அதிலிருந்து மீள்வதற்கான நேரம் என்பது அதிகரிக்கும் சமயத்தில், நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்து விடும்.
மனரீதியான பிரச்சனை, உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்ய மனிதனுக்கு முக்கிய உதவி செய்வது தூக்கம். இந்த தூக்கமின்மை நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும்.
மதுப்பழக்கம் & புகைப்பழக்கம் கொண்ட நபர்கள் அடிக்கடி நோய் வாய்ப்பட நேரிடும். ஆல்கஹால் காரணமாக நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிக்கப்பட்டு, இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
புகை பிடித்தல் புற்று நோயுடன் தொடர்புடையது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி பெரும் விளைவை சந்திக்கும். இன்றளவில் வீட்டிலிருந்து பணியாற்றுவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் வீட்டிற்குள்ளேயே எந்நேரமும் முடங்கிவிடாமல் சூரிய ஒளி படுமாறு அவ்வப்போது வெளியே வந்து செல்லலாம்.