வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
சர்க்கரை நோயாளிகளே உங்களுக்குத்தான்.. இதை உண்டால் இவ்வளவு நன்மைகளா?..! இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துமாம்..!!
பொதுவாகவே சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகள் மோசமானவை என்று எண்ணத்தை கொண்டுள்ளனர். ஆனால் அனைத்துவகை அரசியும் மோசமானவை கிடையாது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் அறிகுறிகளை குறைக்க கருப்பு அரிசி உதவுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு அரிசி ஆரோக்கியமானதாக இருக்கும்.
நார்சத்து மிகுந்தவை என்பதால் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்துடன் ரத்தத்தின் குளுக்கோசை மெதுவாக வெளியிட உதவுகிறது. கருப்பு அரிசியில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், இரும்புசத்து மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் எடைஇழப்பை சாத்தியமாக்கலாம்.
மேலும் கருப்பு அரிசியில் முழு தானியங்கள் அப்படியே இருப்பதால் உடல் பருமனை எதிர்த்து போராட உதவுகிறது. இதயத்திற்கும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இதய ஆரோக்கியத்தில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். கருப்பு அரிசி உட்கொள்வதன் மூலம் இதயத்தை சரியாக இயங்க வைக்கமுடியும்.
பாதுகாப்பானதும் கூட. ஆனால் கருப்பு அரிசியை ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் டாக்டர்களை ஆலோசனைகளை பின்பற்றி தான் அளவாக சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து உணவுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், உடல் செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தினால் விரைவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயலும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.