கேரட்டை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை பாருங்க..!



Take a look at the benefits of adding carrots to your diet frequently.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். குடல் புண்கள் வராமல்  தடுக்க கேரட் உதவுகிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் ஏற்படாது.

நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும்.

கேரட்டில் உள்ள விட்டமின் ஏ சத்து கண்களுக்கு பலம் கொடுக்க கூடியது. விழித்திரைக்கு பலம் சேர்க்கும். கண்பார்வை நன்றாக தெரியும். சருமத்திற ஆரோக்கியத்தை தருகிறது. கோடைகாலத்தில் வெளியில் சென்று வரும்போது புறஊதா கதிர்கள் தோலை பாதிக்கிறது. தோல் கருப்பாவதை தடுக்கிறது. தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும்.
வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் உண்டாகும் மாலைக்கண் நோயை கேரட் குணமாகும்

கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி இதில் உள்ளது.

இயற்கையாகவே இனிப்பான சுவை கொண்ட கேரட்டை விரும்பாதவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கவே முடியாது. கேரேட்டை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை சம்மந்தமான பிரச்சனை குறைந்து கண்பார்வை பளிச்சென தெரியும். இதனால் நாம் அன்றாட உணவில் கேரட்டை சேர்த்து வந்தால் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.