#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் விளாம்பழம்.. நன்மைகள் என்னென்ன?.. வாங்க பார்க்கலாம்..!!
ஒரு ஆண்டின் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களில் விளாம்பழத்திற்கு முக்கிய இடமுண்டு. விளாமரத்தின் காய், மரம், பட்டை, இலை போன்றவற்றை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும்.
அத்துடன் காயை தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். பனங்கற்கண்டு சேர்த்தும் சாப்பிடலாம். கடினமான தோல் பகுதியை கொண்ட விளாம்பழத்தின் ஓட்டை உடைத்து, உள்ளிருக்கும் சதை பகுதியை நமக்கு பிடித்தவாறு பனங்கற்கண்டோ, வெல்லமோ சேர்த்து சாப்பிட வேண்டும்.
இது ஆயிலை நீட்டிக்கும் தன்மை கொண்டது. சிறுவர்களுக்கு தினமும் விளாம்பழம் கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். சக்தியும் மேம்படும். பசியை தூண்டி ஜீரண கோளாறுகளை சரி செய்யும். நமது உடல் ரத்தத்தை விருத்தியாக்குவதோடு, இதயத்தை பலம் பெறவும் செய்கிறது.
விளாம்பழத்தினை அரைத்து முகத்தில் பூசினால் வெயில் காலத்தில் முகத்தில் இழந்த பொலிவானது மீண்டும் கிடைக்கும். மேலும், விளாம்பழத்தில் வைட்டமின் சி, புரதம், இரும்புச்சத்து சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
விளாம்பழம் மட்டுமல்லாது விளாம்பழ மரத்தின் வேர், பட்டை, இலை போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டது. இந்த விளாம்பழ விதையில் அமிலங்கள் உள்ளன. இலையில் சப்போரில் வைடாக்சின் போன்ற வேதிப்பொருட்களும் இருக்கின்றன.