#Breaking: பிரபல ரௌடி குறுந்தையன் 2 பேர் கும்பலால் வெட்டிக்கொலை; பழிக்குப்பழியாக பயங்கரம்.. தஞ்சாவூரில் பரபரப்பு.!



in Thanjavur a Rowdy Killed by 2 Man Team 

 

கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்பதை உறுதி செய்யும் வகையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ரௌடி, பழிவாங்கும் நடவடிக்கையால் போட்டுத்தள்ளப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏழுபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் குறுந்தையன். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். உள்ளூரில் பிரபல ரௌடியாகவும் வலம்வந்துள்ளார். 

இதையும் படிங்க: Thanjavur: "அங்கிள் தின்பண்டம் வாங்கி கொடுக்குறேன் பாப்பா" - 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இருவர் அதிர்ச்சி செயல்.!

கடந்த 2013ம் ஆண்டு உலகநாதன் என்பவரும், 2014ம் ஆண்டு உதயா என்பவரும் குறுந்தையனால் கொலை செய்யப்பட்டனர். 

இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சிறையிலும் குறுந்தையன் இருந்துள்ளார். இதனிடையே, தற்போது சொந்த கிராமத்தில் இருந்த குறுந்தையன் கொலை செய்யப்பட்டார்.

thanjavur

2 பேர் கும்பலால் கொலை

இன்று குறுந்தையன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, அங்கு வந்த ஒத்தகை ராஜா என்பவர், குறுந்தையன் வாகனத்தை இடைமறித்து தாக்குதல் நடத்தினார்.

இரண்டு பேர் கும்பல் நடத்திய தாக்குதலில், குறுந்தையன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். உலகநாதன் மற்றும் உதயா ஆகியோரின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் கொலை சம்பவம் நடந்துள்ளது.

குறுந்தையன் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேற்படி விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: Thanjavur: காதல் மனைவியை 6 மாதத்தில் கழுத்தறுத்து கொன்ற கொடூரம்; நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!