வேலைக்குச்சென்ற முதியவரின் கழுத்தை சுற்றி வளைத்து நெரிக்க ஆரம்பித்த மலைப்பாம்பு! நூலிழையில் உயிர்தப்பிய தொழிலாளர்!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சில தொழிலாளர்கள் ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரியில் புல், புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புவனச்சந்திரன் என்ற 58 வயது முதியவர் மைதானத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது மலைப்பாம்பு ஒன்று நகர்ந்து நெளிந்துகொண்டிருந்ததை பார்த்து அதனை அகற்ற முயற்சித்துள்ளார்.
இந்தநிலையில் புவனச்சந்திரன் அந்த பாம்பை பிடித்து சாக்குமூட்டையில் அடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் திடீரென அந்த மலைப்பாம்பு அவருடைய கழுத்து பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து நெரிக்க துவங்கியது. வலிதாங்கமுடியாத புவனச்சந்திரன் அலறல் சத்தம் போட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி அவருடைய கழுத்தை சுற்றியிருந்த மலைப்பாம்பை கழுத்தில் இருந்து அகற்றினர். கடும் போராட்டத்திற்கு பிறகு புவனச்சந்திரன் கழுத்தில் இருந்த பாம்பை அகற்றி புவனச்சந்திரன் பத்திரமாக மீட்கப்பட்டார். அப்போது அங்கு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தி வைரலாகி வருகிறது.