#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கதறி துடித்த மாணவி... கருணை இல்லாத ஆசிரியர்... தொடர் பாலியல் தொல்லை.!! பதறிய பெற்றோர்.!!
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நீலகிரி மாவட்டம் ஓடபாறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் 13 வயது மாணவிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். பள்ளியில் மற்ற மாணவிகள் இல்லாத சமயங்களில் குறித்த மாணவியை தொடர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்.
பெற்றோரிடம் கதறி துடித்த மாணவி
ஆசிரியர் ரஞ்சித்தின் பாலியல் தொல்லைகள் பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி இது தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுத்திருக்கிறார். மாணவிக்கு நடந்த கொடுமைகளை கேட்டு பதறிய பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக குன்னூர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர் .
இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... மாணவருக்கு பாலியல் தொல்லை.!! போக்சோ சட்டத்தில் 2 ஆசிரியர்கள் கைது.!!
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய குன்னூர் காவல்துறையினர் ஆசிரியர் ரஞ்சித்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிக்கு தொடர் பாலியில் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்துள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண் பாலியல் பலாத்காரம்... 75 வயது முதியவர் கைது.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!