350 வீடுகள்! கண்ணிமைக்கும் நொடியில் மளமளவென சரிந்த 19 அடுக்குமாடி குடியிருப்பு!



19-apartment-destroyed-in-kochin

கேரள மாநிலம் கொச்சி அருகே மரடு பகுதியில் எச் 2 ஓ ஹோலி பெய்த் என்ற 19 மாடி , ஆல்பா செரீன் 16 மாடி, ஜெயின் கோரல் கோவ் 17 மாடி மற்றும் கோல்டன் காயலோரம் 17 மாடி  என 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு இருந்தது.

 இந்த கட்டிடங்களில் 350-க்கும் அதிகமான வீடுகள் இருந்தது. 
இந்நிலையில் இந்த கட்டிடங்கள்  கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில்,  4 கட்டிடங்களையும் இடித்து தள்ளுமாறு கடந்த ஆண்டு மே மாதம் கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Kochinஇதனை தொடர்ந்து கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான பணிகளை கேரள அரசு மேற்கொண்டது. அதனை தொடர்ந்து கட்டிடங்களை வெடிவைத்து தகர்ப்பதற்காக ஒரு மாதமாக கட்டிடத்தில் வெடி மருந்துகள் நிரப்பும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் 2 கட்டிடங்கள் நேற்று இடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு ஜெயின் கோரல் கோவ், கோல்டன் காயலோரம் ஆகிய இரு கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இந்த கட்டிடங்களில் வசித்து வந்தவர்கள்  தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.