வீட்டிலிருந்த 1 கோடியை ஆட்டைய போட காதலனுடன் சேர்ந்து 19 வயது சிறுமி போட்ட மாஸ்டர் பிளான்..! கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.



19 years girl kidnapped and band 1 crose

உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில், நாக்லா பஜ்னா கிராமத்தை சேர்ந்த 19 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் ₹1 கோடிக்கு பள்ளி ஒன்றை கட்டலாம் என நினைத்து பணத்தை வீட்டில் வைத்துள்ளனர். 

இவை அனைத்தையும் பார்த்த அந்த சிறுமி, காதலனுடன் சேர்ந்து பணத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர். அதனை அடுத்து கடந்த வியாழக்கிழமை அன்று சிறுமி காணாமல் போய் உள்ளார். இதனால் பதற்றமான சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். 

முதலில் சிறுமியின் தந்தை தொழிலதிபர் என்பதால் யாரும் பகைவர் கடத்தியிருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அதன்பின் தான் தெரிந்தது சிறுமியை வெவ்வேறு நம்பரிலிருந்து கால் பண்ணி தந்தை மிரட்டியுள்ளார். 

அதனை அடுத்து போலீசார் செல்போன் சிக்னலை ஆராய்ந்ததில் ஒரே இடத்தில் இருந்து அதுவும் சிறுமி வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் தான் போன் வந்துள்ளது. அதனை அடுத்து போலீசார் அங்கு சென்ற போது சிறுமியின் காதலன் தப்பி ஓடியுள்ளார்.