பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆவடியை அதிரவைத்த இரட்டை கொலை! சிக்கிய செல்போன்.! பதறவைக்கும் பகீர் சம்பவம்!!
திருவள்ளூர் மாவட்டம் மிட்டனமல்லி பகுதியில் வசித்து வந்தவர் சிவன்நாயர். இவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர். இவரது மனைவி பிரசன்னா குமாரி. மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர்களது மகன் ஹரி ஓம் ஸ்ரீ அன்னனூரில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வந்துள்ளார். மகள் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறாராம்.
சிவன்நாயரும் வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னாகுமாரி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவலளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணையை தொடங்கிய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சிவன் நாயர் வீட்டில் நகைகள் ஏதேனும் கொள்ளை அடைக்கப்பட்டுள்ளதா? அதனால் இந்த இரட்டை கொலை நடைபெற்றதா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த கொலை சம்பவத்தில் வடமாநில நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இளைஞர் சென்னை வளசரவாக்கத்தில் பணிபுரிந்து வருகிறாராம். இந்த இரட்டை கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.