#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
264 கோடி செலவு செய்து, 8 வருடமா கட்டப்பட்ட பாலம் 29 நாட்களில் இடிந்து விழுந்தது..! அதிர்ச்சி சம்பவம்.!
256 கோடி ரூபாய் செலவு செய்து, சுமார் 8 வருடங்களாக வேலை நடந்து, சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட பாலம் 29 நாட்களில் உடைந்துவிழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 264 ரூபாய் கோடி செலவு செய்து பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சத்தர்காட் என பெயரிடப்பட்ட இந்த பாலமானது கடந்த 8 ஆண்டுகளாக கட்டுமான பணி நடைபெற்று சமீபத்தில்தான் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீகார் மாநில முதல்வர் நித்தீஷ் குமார் கடந்த மாதம் 16 ஆம் தேதி இந்த பாலத்தை திறந்துவைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பாலம் திறந்து 29 நாட்களே முடிந்துள்ள நிலையில் சத்தர்காட் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
264 கோடி ரூபாய் செலவு செய்து 8 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.