#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டாகிராம் நட்பு.!! மயக்க மருந்து கொடுத்து இளம் பெண் பலாத்காரம்.!!
சென்னையில் கணவனை பிரித்த இளம் பெண்ணிடம் சமூக வலைதளம் மூலமாக பழகி, நட்பாகி பின்னர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரிடமிருந்து 5 பவுன் தங்கச் செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான 30 வயது பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார். மேலும் அந்த நபர் நல்லவர் போல நடித்து அந்தப் பெண்ணின் நம்பிக்கையையும் பெற்று இருக்கிறார். இதனால் அவரை சந்திக்க அந்தப் பெண் முடிவு செய்துள்ளார்.
ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் அந்த நபரை சந்தித்தபோது இருவரும் ஜூஸ் அருந்தி இருக்கின்றனர். அப்போது அந்த மர்ம நபர் இளம் பெண் அருந்திய ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மயக்கமடைந்த பெண்ணை லாட்ஜிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்தப் பெண் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினையும் திருடி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 17 வயது மாணவியுடன் உல்லாசம்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கூலித் தொழிலாளி.!!
வழக்கு பதிவு
இதனைத் தொடர்ந்து மயக்கம் தெளிந்த பின் அந்தப் பெண் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். சமூக வலைதள நட்பால் ஏற்பட்ட இந்த விபரீத நிகழ்வு பலருக்கும் பாடமாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: ஸ்கூட்டர், எல்இடி டிவி, 2.5 சவரன் செயின் பரிசு; ஆசையாக பேசி விழாக்கால மோசடி.. மக்களே உஷார்.!