சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன்.! மணப்பெண் யாரு தெரியுமா?? வைரலாகும் புகைப்படங்கள்!!
ஸ்கூட்டர், எல்இடி டிவி, 2.5 சவரன் செயின் பரிசு; ஆசையாக பேசி விழாக்கால மோசடி.. மக்களே உஷார்.!
பண்டிகை காலங்களில் நகைசீட்டு, பரிசு மோசடிகள் தொடருகிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதே நல்லது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, சங்குபுரம் பகுதியில் சம்பவத்தன்று வியாபாரி ஒருவர் சோப்பு உட்பட சில பொருட்களை விற்பனை செய்துள்ளார். இவர் விற்பனை செய்த பொருட்களுடன் பரிசு கூப்பன் ஒன்றையும் கொடுத்துவிட்டு, அவர்களின் செல்போன் என் உட்பட விபரத்தை வாங்கி இருக்கிறார்.
பின் சில நாட்கள் கழித்து தான் கூப்பன் கொடுத்த நபருக்கு தொடர்புகொண்டவர், தங்களின் பெயருக்கு ஸ்கூட்டர், எல்.இ.டி டிவி, 2.5 சவரன் தங்க செயின் ஆகியவை பரிசாக விழுகுந்துள்ளது. இதனை வாங்க ரூ.28 ஆயிரம் வரி செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரி வாசலில் கெத்து காட்ட நினைக்கும் புள்ளிங்கோக்களுக்கு ஆப்பு; போலீஸ் அக்கா திட்டம்.!
வரி செலுத்த வேண்டும் என மோசடி
வரியை செலுத்தினால் பரிசுப்பொருட்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய நபரும் பணத்தை அனுப்ப, இரண்டு நாட்கள் காத்திருக்க கூறப்பட்டுள்ளது. பின் 2 நாட்கள் கழித்து பொருட்கள் மதுரைக்கு வந்துவிட்ட நிலையில், அதனை பெற ரூ.28,600 வாரியாக வழங்கப்பட வேண்டும் என பேசப்பட்டுள்ளது.
அந்த பணத்தையும் அவர் அனுப்பிவிட, பின் அழைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நபர், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து வந்தனர்.
குற்றவாளி கைது
இதனிடையே, மோசடி செயலில் ஈடுபட்டவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வரும் சுடலைமுத்து என்பது உறுதியாகவே, அவரை நேற்று காலை வீட்டு வாசலில் வைத்து அதிரடியாக அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது சுடலைமுத்து கம்பி எண்ண சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விஷயம் குறித்து அறிவுறுத்தியுள்ள காவல் அதிகாரிகள், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை குறிவைத்து கும்பல் மோசடி செயல்களில் ஈடுபடும். இவ்வாறான போலியான பரிசுகளை நம்பி ஏமாற வேண்டாம். இதுபோன்ற நபர்கள் ஆசையாக பரிசு என பேசினால், காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறுதிச்சடங்கில் நடந்த பிரச்சனையில் முதியவர் அடித்துக்கொலை; எழவு வீட்டில் நடந்த அடுத்த சோகம்.!