#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மொபைல் மூலம் ரீசார்ஜ் செய்வீங்களா?.. உஷாரா இருங்க..! டீவி-க்கு ரீசார்ஜ் செய்து ரூ.81,000 பணத்தை இழந்த பெண்மணி..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த பெண்மணி தனது வீட்டில் இருக்கும் செட்-டாப் பாக்ஸுக்கு ரூ.931-க்கு ரீசார்ஜ் செய்துள்ளார். ரீசார்ஜ் செய்த பின்னர் தொலைக்காட்சிகள் ஏதும் ஒளிபரப்படாத நிலையில், கூகுளில் உள்ள வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தேடியுள்ளார்.
அப்போது அவருக்கு வந்த ஒரு எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, மர்மநபர் அவரது செல்போனில் ரிமோட் அப்ளிகேஷன் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார். பின்னர் அதன் மூலமாக அவரது செல்போனை உபயோகம் செய்து அவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.81,000 பணத்தை திருடி இருக்கிறார்கள்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்மணிக்கு மெசேஜ் வரவே அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகார் பேரில் அதிகாரிகள் விசாரணை தற்போது நடத்தி வருகின்றனர்.