#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோபத்தில் மணப்பெண் செய்த பகீர் காரியம்.. ரிவெஞ் எடுத்த மாப்பிள்ளை.. வைரல் வீடியோ.!
திருமண நாள் என்பது மணமக்களின் முக்கியமான நாளாகும். அவர்களின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும் என்று பல தம்பதிகள் உற்சாகத்துடன் இருந்தாலும், சில நேரங்களில் அவை பொய்த்துதான் போகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பதிவிடப்பட்டுள்ள "சில் தீதி சில்" என்ற பெயருடன் உள்ள தம்பதியின் திருமண வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.
வீடியோவில், மணமக்கள் திருமண கோலத்தில் உற்றார்-உறவினர்கள் முன்னிலையில் மேடையில் நிற்கின்றனர். திருமண சடங்காக புரோகிதர் மணமகனை மணமகளுக்கு இனிப்பு வழங்க சொல்கிறார். மணமகன் இனிப்பை எடுத்து மணமகளுக்கு ஊட்ட முயற்சிக்கும் போது, மணமகள் கோபத்துடன் இனிப்பை பிடுங்கி எறிகிறார்.
அதனைத்தொடர்ந்து, மணமகனுக்கு தண்ணீர் கொடுங்கள் என்று கிளாஸை மணப்பெண்ணிடம் கொடுக்க, வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுவிட்டது என மணமகன் தண்ணீரை கீழே ஊற்றுகிறார். ஆத்திரமடைந்த மணமகள் கிளாஸையும் கோபத்துடன் தூக்கியெறிய, விடியோவை பார்த்த பலரும் "சில் தீதி சில்" (தீதி என்றால் தமிழில் அக்கா என்று பொருள்) என்ற தலைப்புடன் பகிர்ந்து வருகின்றனர். அதாவது பொறுமை கொள்ளுங்கள் சகோதரியே என்று பதிவிட்டுள்ளனர்.
அதனால், மணப்பெண்ணே / மனைவியே பொறுமை கொள் என்று வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். மேலும், பலரும் இதனை கட்டாய திருமணமாக இருக்கலாம் அதனால் பெண் கோபத்துடன் இருக்கிறார் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த வீடியோ எப்போது? எங்கு? யாரால் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இல்லை.