#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லிப்ட் கேட்டு காரில் ஏறி பாலியல் பலாத்கார நாடகம் ஆடிய இளம்பெண்... கடைசியில் இப்படி ஆச்சே...
ஹைதராபாத் மாநிலம் சாஸ்திரிபுரத்தைச் சேர்ந்தவர் சுமையா சுல்தானா. இவர் தனியாக காரில் வரும் ஆண் நபர்களை குறித்து வைத்து லிப்ட் கேட்டு ஏறுவதை வழக்கமாக கொண்டவர். அவ்வாறு காரில் செல்லும் ஆண் நபரிடம் முதலில் ஆபாசமாக பேசி மயக்கி வலையில் வீழ்த்துவார்.
பின்னர் அந்த ஆண் நபர்கள் சபலமடையும் நேரத்தில் சுமையா தனது ஆடையை கிழித்து கொண்டு அழுவார். அவர்களிடம் நீங்கள் தான் என்னைய பாலியல் பலாத்காரம் செய்துள்ளீர்கள் என போலீசில் புகார் அளிக்க போவதாக மிரட்டி அழுவார். அதில் பயம் அடையும் நபர்களிடமிருந்து பணத்தை ஆட்டைய போட்டு விட்டு காரிலிருந்து இறங்கி சென்று விடுவார்.
இதனை வழக்கமாக கொண்டு செயல்படும் சுமையா நேற்றும் அதேபோல் தனியாக காரில் வந்த நபரிடம் பாலியல் பலாத்கார நாடகம் ஆடியுள்ளார். இதனை கண்டு பயந்து போகாத அந்த நபர் செய்யாத தவறுக்கு ஏன் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறி நேராக போலீஸ் நிலையத்திற்கு காரை விட்டுள்ளார். அங்கு போலீசாரிடம் நடந்தவற்றை விரிவாக கூறியுள்ளார் அந்த நபர்.
போலீசார் சுமையாவை விசாரித்ததில் இதே போல் பல ஆண் நபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. அதனையடுத்து போலீசார் சுமையாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.