ஆதார் அப்டேட் பண்ணலையா.? ரேஷன் பொருட்களுக்கு ஆபத்து.. உடனே பண்ணுங்க.! 



aadhar update for ration things

இந்திய நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்பது தற்போது இருந்து வருகிறது. இது மிக முக்கிய அடையாள ஆவணமாக இருக்கிறது. எனவே நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளிலும் ஆதார் கார்டை இணைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

aadhaar update

அரசின் சலுகைகளை பெற 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் பொதுமக்களின் வசதிக்காக ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான அவகாசம் செப்டம்பர் 14 என்று இருந்தது.  

aadhaar update

ஆதார் அட்டையை புதுப்பித்தால் மட்டும் தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. தற்போது வரை ஆதார் அட்டையை புதுப்பிக்காமல் இருக்கும் நபர்கள் உடனடியாக ஆதார் மையங்கள் மூலமாகவோ அல்லது வீட்டில் இருந்து மை ஆதார் என்ற போர்டல் மூலமாகவோ அப்டேட் செய்து கொள்ளலாம். அப்படி அப்டேட் செய்யாமல் டிசம்பர் 14ஆம் தேதி வரை இருந்தால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.