பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாகிஸ்தானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிநந்தனின் சிலை!
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அந்த சமயத்தில் அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தபோது அபிநந்தன் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் சிக்கினார்.
இதனையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணையில் அபிநந்தன் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தனுக்கு காபி கொடுக்கப்பட்டு உபரசிக்கப்பட்டது. பின்னர், இருநாடுகளுக்கு இடையேயான பலகட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து நாடு திரும்பிய அபிநந்தன் காயமடைந்ததற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனைத்தொடர்ந்து காயத்தில் இருந்து குணமடைந்த அபிநந்தனை மீண்டும் விமானத்தை இயக்க விமானப்படை ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள விமானப்படையில் அபிநந்தன் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தினை குறிப்பிடும் வகையில், பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வான்வெளி படை சார்பாக அபிநந்தன் சிலை, அவர் காபி குடித்த குவளை, அவர் ஓட்டிவந்த விமானத்தின் சிறு பகுதிகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.