#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்டி ராமாராவ் மகன் நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி
ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் காயமடைந்தார். இவர் தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் கட்சி பொதுக் கூட்டத்துக்காக நேற்று கார் மூலம் சென்று கொண்டிருந்தார். நர்கேட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். முன்னாள் எம்.பி.,யான இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர்.,ன் மகனும், நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தையும் ஆவார்.