#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேரள வெள்ளத்திற்க்காக, தான் ஆசைப்பட்டதை விட்டுக்கொடுத்த நடிகர் பிருத்விராஜ்!! குவிந்துவரும் பாராட்டுகள்!
பிரபல நடிகர் பிருத்விராஜ். தமிழில், ’மொழி’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மோகன் லால் நடித்த, ‘லூசிபர்’ என்ற படத்தை இயக்கினார். இது சூப்பர் ஹிட்டானது. இளம் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ என எந்த ஒரு அடையாளத்திற்குள்ளும் அடங்காமல், தான் செய்யும் அனைத்து கதாபாத்திரங்களிலும் தன் தனிப்பட்ட நடிப்புத் திறமையால் ஜொலிக்கும் ஒரு சில நடிகர்களிலும் பிருத்விராஜுக்கு தனி இடம் உண்டு.
மலையாள சினிமாத் துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இயங்கி வந்த சுகுமாரன்- நடிகை மல்லிகா ஆகியோரது மகன் தான் பிருத்விராஜ். இவருக்கு கார்கள் மீது அதிக ஆசை உண்டு. இவர் புதிது புதிதாக கார்களை வாங்குவார். அதற்கு பேன்சி நம்பர் வாங்குவதும் வழக்கம். இதற்காக அவர் பல லட்சங்களை செலவு செய்வார்.
சமீபத்தில் இவர் மிக விலை உயர்ந்த லம்போர்கினி காரை வாங்கினார். இவர் தனது காருக்கு பேன்சி எண் பெறுவதற்காக இவர் ரூ.6 லட்சம் செலவு செய்தார், இந்நிலையில், இவர் ரூ.3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஓக் காரை வாங்கினார்.
அவர் வாங்கிய அந்த காருக்கு KL 07 CS 7777 என்ற எண் கிடைக்க, கொச்சி ஆர்டிஓ ஆபிசில் பதிவு செய்திருந்தார். இந்த எண்ணிற்கு மேலும் பலர் விண்ணப்பித்து இருந்தனர். ஒரே எண்ணிற்கு பலர் விண்ணப்பித்தால் ஏலத்தில் விடப்பட்டு, அதிக தொகைக்கு கேட்பவர்களுக்கு அந்த எண் வழங்கப்படுவது வழக்கம்.
பிருத்விராஜ் கேட்ட எண்ணிற்கு பலர் போட்டி போட்டதால் ஏலத்தொகை பல லட்சத்தை தாண்ட வாய்ப்பு இருந்தது. இந்நிலையில், பிருத்விராஜ் திடீர் என்று ஏலத்தில் இருந்து விலகி கொள்வதாக ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.
பிருத்விராஜ் அந்த ஏலத்தில் இருந்து விலகுவதாகவும் அதற்காக வைத்திருந்த தொகையை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாகவும் ஆர்டிஓ-விற்கு மெசேஜ் அனுப்பியுள்ளதாக ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.