தெலுங்கானாவில் வழங்கப்பட்டது சரியான நீதி! நடிகை நயன்தாரா அறிக்கை



Actress nayanthara about telangana encounter

தெலுங்கானாவில் கடந்த வாரம் கால்நடை மருத்துவராக பணியாற்றிய இளம்பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோக்களை கொண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் நேற்று விசாரணைக்காக கொலை நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்றனர். அப்போது தப்பிக்க முயன்ற அந்த 4 பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்து சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்துள்ளது. 

nayanthara

இந்த சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை" என குறிப்பிட்டுள்ள அவர் இப்படி ஒரு நீதி தெலுங்கானா காவல் துறை அதிகாரிகளால் அரங்கேறியுள்ளது என கூறியுள்ளார். 

மேலும் நீதி கிடைத்திருக்கும் இந்த தருணம் மழிச்சியாய் இருந்தாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை புகட்ட வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே உண்மையான நாயகன் என்பதை அனைத்து ஆண் குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.